மோகன்​லாலின் ‘தி​ரிஷ்​யம் 3’ பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
மோகன்​லாலின் ‘தி​ரிஷ்​யம் 3’ பட ரிலீஸ் தள்ளிப்போகிறதா?
Published on

கடந்த 2013-ம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான படம் ‘திரிஷ்யம்’. ரூ.5 கோடி செலவில் தயாரான இப்படம் ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது. இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க 'பாபநாசம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் ‘திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இது நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘திரிஷ்யம்’ 3ம் பாகம் மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. இந்தி படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன், தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்துள்ளனர். ஆசீர்​வாத் சினி​மாஸ் சார்​பில் ஆண்​டனி பெரும்​பாவூர் தயாரித்துள்ள இப்​படம் ஏப்ரல் 2-ம் தேதி வெளி​யா​வ​தாக அறிவிக்கப்பட்​டிருந்​தது.

இந்நிலையில், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ‘திரிஷ்யம் 3’ ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மலையாளத் திரைப்படங்களுக்கு வணிகரீதியாக வளைகுடா நாடுகளில் நல்ல வியாபாரம் உள்ள நிலையில் தற்போது படத்தை வெளியிட்டால் அங்கு வணிகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால் பட வெளியீட்டை தள்ளிவைக்க படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் உறுதி செய்யப்பட்ட வெளியீட்டுத் தேதி பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com