சூர்யா படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே?

சூர்யாவின் 44-வது படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
சூர்யா படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே?
Published on

சென்னை,

தமிழில் 'முகமூடி' படத்தில் அறிமுகமான பூஜா ஹெக்டே, 'பீஸ்ட்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவியதால் சினிமாவில் இருந்து சிறிது விலகி இருந்தார்.

தற்போது, சூர்யாவின் 44-வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார் . இதில், ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சமீபத்தில், 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ரூ.3.5 கோடி வரை சம்பளம் வாங்கிவந்த பூஜா ஹெக்டே, தற்போது அதனை ரூ. 4 கோடியாக உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com