மகேஷ் பாபுவுடன் எஸ்எஸ்எம்பி 29-க்கு பிறகு மகாபாரதத்தை இயக்கப்போகிறாரா ராஜமவுலி?


?Is Rajamouli going to direct Mahabharata after SSMP 29 with Mahesh Babu?
x
தினத்தந்தி 12 Jan 2025 8:07 AM IST (Updated: 12 Jan 2025 8:08 AM IST)
t-max-icont-min-icon

ராஜமவுலி தனது நீண்டகால கனவு திட்டமான மகாபாரதத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து "எஸ்எஸ்எம்பி 29" படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி வருகிறார்.

இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்று ராஜமவுலி தெரிவித்திருந்தார். மேலும், இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணி நிறைவடைந்துவிட்டதாகவும், இதன் படப்பிடிப்பை வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தை முடித்த பிறகு ராஜமவுலி தனது நீண்டகால கனவு திட்டமான மகாபாரதத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக ராஜமவுலி, "மகாபாரதம் படத்தை எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. 10 வருடங்களாக அந்த கனவோடு வாழ்ந்து வருகிறேன்.நிச்சயம் ஒரு நாள் அதை நிறைவேற்றுவேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story