"பராசக்தி" படப்பிடிப்பில் ராணா

சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். சமீபத்தில் இலங்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்றது. சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 'பராசக்தி' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் தொடங்கி உள்ளன. இங்கு, முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ள நிலையில், நேற்று தொடங்கிய இப்படப்பிடிப்பில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருக்கின்றனர். .இதனால், பராசக்தி படத்தில் ராணா டகுபதி இணைந்துள்ளதாகத் தெரிகிறது.






