

சிவாஜி கணேசன் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரியவரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும், திரை நடிப்பு கலையிலும் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர். சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும், நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்தி கொண்டிருக்கிறது. தேர்தல் காலமது நெருங்கி வருகின்ற இவ்வேளையில், திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றனர். சிவாஜியின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு. பெரும்தலைவர்களோடு பழகியும், பணிபுரிந்தும் வந்தவர். அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார். இனியும் அவர் பெயரை கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் நடிகர் சங்கத்தில் நடந்த தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளது.
இவ்வாறு நாசர் கூறியுள்ளார்.