'அருவி' இயக்குனரின் புதிய படத்தை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன்
Published on

சென்னை,

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் `அருவி' பட இயக்குநர் அருண் பிரபு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

'சேயோன்'

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது தனது 26-வது திரைப்படமான 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படம், வருகிற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

`அருவி'

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் `அருவி' பட இயக்குநர் அருண் பிரபு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போவதாக தகவல் வெளியானநிலையில், தற்போது அந்த செய்தி உண்மை இல்லை எனவும், சிவகார்த்திகேயன் தயாரிக்க மட்டுமே செய்கிறார் எனவும் கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com