டோலிவுட்டை விட பாலிவுட்டை விரும்புகிறாரா ஸ்ரீலீலா?


Is Sreeleela preferring Bollywood over Tollywood?
x
தினத்தந்தி 7 May 2025 8:04 AM IST (Updated: 7 May 2025 12:13 PM IST)
t-max-icont-min-icon

கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

டோலிவுட் (தெலுங்கு திரையுலகம்) சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. புஷ்பா 2-ல் கிஸ்ஸிக் பாடலுக்கு நடனமாடிய இவர், அதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.

தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த நடிகை ஸ்ரீலீலா பாலிவுட்டிலும் ரசிகர்களை கவர உள்ளார். கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

கடந்த சில நாட்களாகவே, பாலிவுட்டில் ஸ்ரீலீலா மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இடையேயான கூட்டணி குறித்து செய்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றன.

பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ் ஷான்டில்யாவின் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை ஆனந்த் எல். ராய் மற்றும் மஹாவீர் ஜெயின் இணைந்து தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

எக்ஸ்ட்ரா ஆர்டினரி மேன், ஆதிகேசவா, ஸ்கந்தா போன்ற தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியைப் பெற்ற ஸ்ரீலீலா தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story