'ஆவேஷம்' பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சூர்யா?


ஆவேஷம் பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா சூர்யா?
x

'ஆவேஷம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து 'லக்கி பாஸ்கர்' பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற 'ஆவேஷம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story