சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” பிருத்விராஜ் பட ரீமேக்கா?

இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதிய ஸ்கிரிப்ட்தான் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’. இது மலையாளப் படத்தின் ரீமேக் இல்லை என்று படக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது.
சூர்யாவின் “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” பிருத்விராஜ் பட ரீமேக்கா?
Published on

தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இது சூர்யாவின் 46-வது படமாகும். நாக வம்சி தாயரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் குழந்தையுடன் சூர்யா நடப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அது, மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்து வெளியான ‘கங்காரு’ என்ற படத்தின் போஸ்டர் போலவே இருந்ததால், இது அப்படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின. மலையாளத்தில் 2007-ம் ஆண்டு வெளியான ‘கங்காரு’ படத்தை ராஜ் பாபு இயக்கி இருந்தார். ஜெயசூர்யா, காவ்யா மாதவன் உள்பட பலர் அதில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், இது எந்த படத்தின் ரீமேக்கும் இல்லை என்று ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படக்குழு மறுத்துள்ளது. “இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதிய ஒரிஜினல் ஸ்கிரிப்ட்தான் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ். இது மலையாளப் படத்தின் ரீமேக் இல்லை” என்று படக்குழு தெளிவுப்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com