நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா?

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வரும் தி பாரடைஸ் படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
சென்னை,
நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் தசரா. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான 'தி பாரடைஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு மார்ச் 26ம் தேதி வெளியாகிறது. ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் மோகன் பாபு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், தி பாரடைஸ் படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம்பெற உள்ளதாகவும், அதில் நடனமாட நடிகை தமன்னாவிடம் படக்குழுவினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.






