கைவிடப்படுகிறதா 'இந்தியன் 3' படம்.. வெளியான தகவல்


கைவிடப்படுகிறதா இந்தியன் 3 படம்.. வெளியான தகவல்
x
தினத்தந்தி 19 March 2025 4:03 PM IST (Updated: 23 July 2025 1:11 PM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 3' படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்திருந்தார்.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

'இந்தியன் 2' படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், 'இந்தியன் 3' படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. எனவே இயக்குனர் ஷங்கர் இந்தியன் 3 படம் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்தியன் 3 படத்தின் ஒரு பாடலை எடுக்க ஷங்கர் லைகா நிறுவனத்திடம் பெரிய தொகையை கேட்டதாகவும், லைகா நிறுவனம் அதனை தர மறுத்துவிட்டதாகவும் தகவல்வெளியாகி உள்ளது. இதனால் , இந்தியன் 3 படத்திலிருந்து ஷங்கர் விழகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் கைவிடப்பட்டிருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story