‘ஓம்’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அணிந்த வாட்சின் விலை இத்தனை கோடியா?

18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் நீல நிற செராமிக் பொருட்களால் இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது.

‘ஓம்’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் அணிந்த வாட்சின் விலை இத்தனை கோடியா?
Published on: 

சென்னை,

நடிகர் தனுஷ் அணிந்திருந்த ஆடம்பர கைக்கடிகாரம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, அவர் அணிந்திருந்த வாட்சின் விலை ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வாட்ச்

சென்னையில் நடைபெற்ற ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தனுஷின் உடை மற்றும் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

வாட்சின் விலை ரூ.2 கோடி!

தகவல்களின்படி, தனுஷ் அணிந்திருந்தது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘வான்கார்ட்’ (Vanguart) நிறுவனத்தின் ‘ஆர்ப் ஃப்ளையிங் டூர்பில்லன்’ (Orb Flying Tourbillon) என்ற ஆடம்பர கைக்கடிகாரம் ஆகும். இதன் விலை சுமார் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.2 கோடியாகும்.

18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் நீல நிற செராமிக் பொருட்களால் இந்த வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான கடிகாரங்களைப் போல இல்லாமல், இதில் வித்தியாசமான சுழலும் அமைப்பு கொண்டது.

உலகம் முழுவதும் 25 வாட்ச்கள் மட்டுமே!

இந்த கைக்கடிகாரத்தின் மற்றொரு சிறப்பம்சம், உலகம் முழுவதும் வெறும் 25 எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதுதான். இதன் தனித்துவமான வடிவமைப்பும் அதிக விலையும் தற்போது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X