சுந்தர் சி - விஷால் கூட்டணி மீண்டும் இணைகிறதா?

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் 'மதகஜராஜா' நல்ல வரவேற்பை பெற்றது.
சுந்தர் சி - விஷால் கூட்டணி மீண்டும் இணைகிறதா?
Published on

சென்னை,

விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான படம் 'மதகஜராஜா'. கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், மனோபாலா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், மதகஜராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, அடுத்ததாக சுந்தர் சி 'கலகலப்பு 3' படத்தை இயக்க உள்ளார். கலகலப்பு 3 படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய பின்னர் இவர்களின் கூட்டணியில் புதிய படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய படம் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் வெளியான 'மதகஜராஜா, ஆம்பள, ஆக்ஷன்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com