சாய் தன்ஷிகாவுடனான திருமணம் தள்ளிப்போகிறதா? நடிகர் விஷால் கொடுத்த விளக்கம்

நிச்சயம் ஆகஸ்ட் 29-ந் தேதி நல்ல செய்தி சொல்வேன் என்று விஷால் கூறியுள்ளார்.
சென்னை,
'கிழக்கு சீமையிலே, உழவன், கண்ணெதிரே தோன்றினாள், சுயம்வரம், அப்பு' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்த விக்னேஷ், பல வருடங்களுக்கு பிறகு ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் 'ரெட் பிளவர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆக்ஸ்ட் 8-ந் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் விஷால் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார். அதில், விஷால் பேசும்போது, 'மதகஜராஜா' படவிழாவில் கைகள் நடுங்க நான் பேசிய வீடியோ வைரலானது. படமும் பெரிய 'ஹிட்'டானது. இன்றைக்கு மீண்டும் கைகள் நடுங்க பேசுகிறேன். எனவே இந்த 'ரெட் பிளவர்' படமும் 'ஹிட்' ஆகும்.
அதனைத்தொடர்ந்து 'ஆகஸ்டு 29-ந்தேதி நடக்க இருந்த உங்கள் திருமணம் தள்ளிப்போவதாக பேச்சு அடிபடுகிறதே...' என்று கேட்கப்பட்டது. இதற்கு விஷால் பதிலளிக்கும்போது, ''நடிகர் சங்க கட்டிடம் விரைவில் திறக்கப்படும். எனது திருமணம் அங்குதான் நடக்கும். நிச்சயம் தாமதம் ஆகாது. ஆகஸ்ட் 29-ந் தேதி நல்ல செய்தி சொல்வேன்'', என்றார்.
நடிகர் விஷால், நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் 29-ந் தேதி திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






