கவர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லையா..? - கெட்டிகா ஷர்மாவை விமர்சித்த ரசிகர்கள்

நடிகை கெட்டிகா ஷர்மா ‘ராபின்ஹூட்' படத்தில் இடம்பெற்றுள்ள 'அதி தான் சர்ப்பிரைஸ்' பாடலில் நடனமாடி பிரபலமானவர்.
தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை, படங்களில் 'ஐட்டம் சாங்' எனப்படும் கவர்ச்சி குத்தாட்ட பாடல் தற்போது கட்டாயம் இடம்பெற்று வருகிறது. கவர்ச்சி குத்தாட்டம் போடும் நடிகைகளும் பெரியளவில் பிரபலமாகி விடுகிறார்கள்.
அந்தவகையில், 'ராபின்ஹூட்' படத்தில் 'அதி தான் சர்ப்பிரைஸ்...' பாட்டுக்கு மாராப்பில் மல்லிகை பூ கட்டி கெட்டிகா ஷர்மா போட்ட ஆட்டம் அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்தது. அந்த பாட்டை 'ரிப்பீட்' மோடில் பார்த்து ரசித்து வந்தனர்.
கெட்டிகா ஷர்மா, எங்கு சென்றாலும் கவர்ச்சிகரமான உடை அணிந்து அனைவரையுமே திரும்பி பார்க்க வைப்பது வழக்கம். அந்தவகையில் வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டு இருக்கும் கெட்டிகா ஷர்மா, சமீபத்தில் ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அங்கு சட்டை பட்டன்களை கழற்றி, கவர்ச்சி காட்டி அவர் சுற்றி அனைவரையுமே கிளுகிளுப்பூட்டினார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானது. இதைப்பார்த்த ரசிகர்கள், 'ஓட்டலுக்கு சென்றாலும் இப்படியா... ஒரு எல்லை இல்லையா...' என விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.






