4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தந்தை-மகன் கூட்டணி?


Is this father-son duo teaming up again after 4 years?
x

பூரி ஜெகன்நாத் தற்போது விஜய் சேதுபதியை இயக்க உள்ளார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பூரி ஜெகன்நாத். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் இயக்க உள்ளார்.

பான் இந்தியா அளவில் உருவாக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்க நடிகை தபு, நடிகர் துனியா விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது நடக்கும் பட்சத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'ரொமாண்டிக்' படத்திற்கு பிறகு தந்தை-மகன் இணையும் படமாக இது இருக்கும். 'ரொமாண்டிக்' படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க கதாநாயகனாக ஆகாஷ் பூரி நடித்திருந்தார்.

1 More update

Next Story