நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளார்.
நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்தை இயக்குபவர் இவரா?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'குடும்பஸ்தன்' வெளியானது. குடும்ப பின்னணியில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

அதனை தொடர்ந்து, 'குடும்பஸ்தன்' பட இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சிம்புவின் 50-வது படத்தை இயக்க உள்ளார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால், தொடர்ந்து அப்படம் தள்ளிப்போவதால் சிறிய படமொன்றை இயக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

எனவே தேசிங்கு பெரியசாமி மணிகண்டனை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com