கமலின் அடுத்தப்பட இயக்குனர் இவரா?

கமலின் அடுத்தப்பட இயக்குனர் இவரா?

கமல்ஹாசனின் அடுத்தப்படத்தை வீர தீர சூரன் படம் இயக்குனர் இயக்க உள்ளார்.
Published on

சென்னை,

இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடந்த 5ந் தேதி தக் லைப் படம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தக் லைப் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்ததாக அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தெரிகின்றது.

இதற்கிடையில், கமல்ஹாசன் 'வீர தீர சூரன்' படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தினை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com