சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா?


சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா?
x
தினத்தந்தி 9 Sept 2025 11:04 AM IST (Updated: 10 Oct 2025 12:35 PM IST)
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மதராஸி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை 2022-ம் ஆண்டு வெளியான 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story