'கூலி' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'கூலி' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?
Published on

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் 30 சதவீத படப்பிடிப்பை விரைவில் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த உள்ளனர். இதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று பாங்காக் புறப்பட்டு சென்றுள்ளார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் 13-ம் தேதி முதல் 28 வரை நடைபெற உள்ளது.

இத்திரைப்படம் கோடை விடுமுறை முன்னிட்டு மே மாதம் வெளியாகும் என தகவல்கள் பரவி வந்தநிலையில், தற்போது ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தயாரிப்பு நிறுவனம் கூலி திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான 'ஜெயிலர்' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com