சூர்யா-வெங்கி அட்லூரி படத்தின் ''டைட்டில்'' இதுவா?


Is this the title of Suriya & Venky Atluri’s film?
x
தினத்தந்தி 4 July 2025 3:45 PM IST (Updated: 24 July 2025 11:46 AM IST)
t-max-icont-min-icon

தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ''கருப்பு''. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ''லக்கி பாஸ்கர்'' இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' என்ற டைட்டில் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

1 More update

Next Story