மோகன்லால் - மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?


மோகன்லால் - மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா?
x
தினத்தந்தி 26 Jun 2025 9:15 AM IST (Updated: 2 Oct 2025 3:18 PM IST)
t-max-icont-min-icon

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் அவர்கள் இணைந்து நடிக்கும் 8வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை 'டேக் ஆப்', 'மாலிக்' படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார்.

இதில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முதல்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் முடிந்திருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இப்படத்திற்கு "பேட்ரியாட்" (patriot- தேசபக்தன்) என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதாவது, நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இலங்கை சுற்றுலாத்துறை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் 'பேட்ரியாட்' என்கிற படத்தில் நடிப்பதற்காக வரும் மோகன்லாலை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். நடிகர் மோகன்லாலும் பேட்டி ஒன்றில் படத்தின் டைட்டில் பேட்ரியாட் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

1 More update

Next Story