கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தின் வில்லன் இவரா?

47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தின் வில்லன் இவரா?
Published on

சென்னை,

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 'டான்' படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதைத் தொடர்ந்து ரஜினி கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்ப்பில் இன்பன் உதயநிதி தயாரிக்க உள்ளார்.

47 வருடங்களுக்குப் பிறகு ரஜினியும் கமலும் இணைந்து நடிப்பதால் இந்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தினை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ரஜினி-கமல் இணையும் (KHxRK) படத்தில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன் களமிறங்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் (KHxRK) புரோமோ வீடியோ வெளியானது. அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான இந்தப் புரோமோ மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த வீடியோவில், கமலும் ரஜினியும் இணைந்து இயக்குனர் நெல்சனிடம் யார் ஹீரோ என்று கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில், கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படத்தில் பிரபல மலையாள நடிகரான மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com