சினிமாவை விட்டு விலகுகிறாரா திரிஷா?

நடிகை திரிஷா குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது யூட்யூப் சேனலில் அளித்த பதில் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சினிமாவை விட்டு விலகுகிறாரா திரிஷா?
Published on

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் திரிஷா குறித்து சமீப காலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது. அதிலும், திரிஷா புதிய படங்களுக்கு கமிட் ஆகாமல் இருப்பதாகவும், இதனால் திரையுலகில் இருந்து விலக உள்ளாரா? என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாக சமீப காலமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், நடிகை திரிஷா இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லையா என்ற கேள்விக்கு நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது யூட்யூப் சேனலில் அளித்த பதில் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சித்ரா லட்சுமணன் அளித்த பதிலில், நடிகை திரிஷா பற்றி வெளியாகியிருக்கும் அந்த செய்தி உண்மைதான். சமீபத்தில் ஒரு சில தயாரிப்பாளர்கள் கூட எனக்கு அதை உறுதிப்படுத்தினார்கள் என்று சித்ரா லட்சுமணன் பதிலளித்துள்ளதாக முன்னணி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

திரிஷா தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து சிரஞ்சீவி நடிப்பில் விஸ்வம்பரா, மோகன் லால் நடிப்பில் ராம் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இதில் சிரஞ்சீவி படத்தின் பட வேலைகள் தொடங்கியுள்ளன. இதற்கு பிறகு புதிதாக எந்த படத்திலும் திரிஷா ஒப்பந்தம் ஆகவில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com