தடையை மீறி துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்கிறாரா?

நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படங்களில் நடிக்க தடை விதித்து பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார்.
தடையை மீறி துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்கிறாரா?
Published on

நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் படங்களில் நடிக்க தடை விதித்து பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார்.

புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக புதிய தகவல் பரவி வருகிறது.

அத்துடன் வடிவேல் டிடெக்டிவ் நேசமணி' என்ற பெயரில் தயாராகும் துப்பறியும் கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராம்பாலா இயக்கும் இந்த படத்தை சி.வி.குமார் தயாரிக்க இருப்பதாகவும் இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. வடிவேல் துப்பறிவாளர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்துடன் இந்த செய்தி வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பலரும் உண்மை என்று நம்பி வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் வடிவேல் படத்தை தயாரிக்கவில்லை என்று பட அதிபர் சி.வி.குமார் மறுத்துள்ளார். அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பொய் செய்தியாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஆனாலும் டிசைன் சூப்பர்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com