ராஜமவுலியின் 'எஸ்எஸ்எம்பி 29' படத்தில் நடிக்கிறாரா விக்ரம்?


Is Vikram acting in Rajamoulis SSMB 29?
x

’தங்கலான்’ படத்தின் புரமோசனின்போது, ​​ராஜமவுலியுடன் பணிபுரிவது குறித்து விக்ரம் பேசி இருந்தார்.

சென்னை,

ராஜமவுலி மற்றும் மகேஷ் பாபுவின் 'எஸ்எஸ்எம்பி 29' படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே, தமிழ் நட்சத்திரம் விக்ரம் வில்லனாக நடிக்க உள்ளதாக வதந்திகள் பரவின. இருப்பினும், பிருத்விராஜ் இப்படத்தில் வில்லனாக இணைந்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், மீண்டும் அந்த வதந்தி பரவத்துவங்கி இருக்கிறது. அதன்படி, விக்ரம் தற்போது மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவிலிருந்து அதிகாரபூர்வமாக எதுவும் வெளிவரவில்லை. இதுவும் முன்புபோல வதந்திதானா? அல்லது அதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னதாக 'தங்கலான்' படத்தின் புரமோசனின்போது, ராஜமவுலியுடன் பணிபுரிவது குறித்து விக்ரம் பேசி இருந்தார். அவர் கூறுகையில், "ராஜமவுலி எனக்கொரு நல்ல நண்பர். நாங்கள் சிறிது காலமாகவே இணைந்து பணியாற்றிவது பற்றி பேசி வருகிறோம். நிச்சயமாக, ஒரு படம் பண்ணுவோம்' என்றார்.

1 More update

Next Story