நடிகையை 14 முறை அறைந்த நாகார்ஜுனா


Isha Koppikar says Nagarjuna slapped her 14 times
x
தினத்தந்தி 30 July 2025 8:34 PM IST (Updated: 30 July 2025 8:35 PM IST)
t-max-icont-min-icon

நாகார்ஜுனாவுடன் "சந்திரலேகா" படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை நடிகை இஷா கோபிகர் நினைவு கூர்ந்தார்.

சென்னை,

"சந்திரலேகா" படப்பிடிப்பில் நாகார்ஜுனா தன்னை 14 முறை அறைந்ததாக நடிகை இஷா கோபிகர் கூறியுள்ளார்.

தமிழில் காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா, அயலான் படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு இவரை தெரியவில்லை என்றாலும், 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பிரபலமாக இருந்தார்.

இந்நிலையில் இஷா கோபிகர் சமீபத்திய ஒரு நேர்காணலில் நாகார்ஜுனாவுடன் "சந்திரலேகா" படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தை நினைவு கூர்ந்தார். அதன்படி, இப்படத்தில் கோபத்தை வெளிகாட்டும் காட்சி ஒன்று எதிர்பார்த்த படி வரவில்லை என்றும், எனவே உண்மையாக தோன்ற வேண்டும் என்பற்காக நாகார்ஜுனாவை தன்னை அறையுமாறு கேட்டுக் கொண்டதாகவும் இஷா தெரிவித்தார்.

அதற்கு ஆரம்பத்தில், நாகார்ஜுனா தயங்கினார் என்றும் இறுதியில் 14 முறை அறைந்ததாகவும் கூறினார். கன்னத்தில் அறைந்த அடையாளங்கள் இருந்ததாகவும் டேக்கிற்கு பிறகும் நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டதாகவும் அவர் கூறினார்.

1 More update

Next Story