நடிகர் சங்க நிர்வாக பதவிக்கால நீட்டிப்பு விவகாரம்: ஐகோர்ட்டில் புதிய திருப்பம்

நடிகர் சங்கத்துக்கு எதிராக நம்பிராஜன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் எஸ்.ஆர்.சேகர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

நடிகர் சங்க நிர்வாக பதவிக்கால நீட்டிப்பு விவகாரம்: ஐகோர்ட்டில் புதிய திருப்பம்
Published on

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க சட்ட விதிகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் நிர்வாகிகள் பதவிகாலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நம்பிராஜன் என்ற சங்க உறுப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், "இந்த தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை கமிஷனராக நியமித்து சங்கத்தேர்தலை நடத்தவேண்டும். அதுவரை தற்போதைய நிர்வாக குழு, செயற்குழு ஆகியவை எந்த முடிவுகளும் எடுக்க தடை விதிக்கவேண்டும்” என்று கூறியிருந்தார்.

நம்பிராஜன் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், சங்கத்தின் மற்றொரு உறுப்பினர் எஸ்.ஆர்.சேகர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மரியா கிளாட், நிர்வாகிகள் பதவிக்காலத்தை நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க முடியாது என்று கூறி, எஸ்.ஆர்.சேகர் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com