நினைத்தபடி நடக்கவில்லை.. திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை ரித்விகா

சில மாதங்களுக்கு பிறகு நடிகை ரித்விகாவின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

நினைத்தபடி நடக்கவில்லை.. திருமணம் குறித்து மனம் திறந்த நடிகை ரித்விகா
Published on

சென்னை,

பரதேசி, மெட்ராஸ், கபாலி, டி.என்.ஏ. போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ரித்விகா. பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று சிறந்த போட்டியாளராக வெற்றி பெற்றார். தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்த ரித்விகா, கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். எனினும், சில மாதங்களுக்கு பிறகு அவரது திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது இந்த தகவலை ரித்விகா அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடந்த கேள்வி-பதில் உரையாடலின் போது மனம் திறந்து பேசியுள்ளார். ரசிகர் ஒருவர் “உங்கள் திருமணத்தில் ஏதும் பிரச்சினையா?” என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ரித்விகா, “நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை” என கூறியுள்ளார். ரித்விகாவின் இந்த பதிவு ரசிகர்களை பலரையும் சோகமடைய செய்துள்ளது. ரித்விகாவிற்கு ஆறுதலாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டதையும் பார்க்க முடிந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com