தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு பெருமையான விஷயம் - கெட்டிகா சர்மா

தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமைக்குரியவர்கள் என்று நடிகை கெட்டிகா சர்மா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

'ராபின்ஹூட்' என்ற தெலுங்கு படத்தில் 'அதி தான் சர்ப்பிரைஸ்...' என்ற பாட்டுக்கு மாராப்பில் மல்லிகை பூ கட்டி கெட்டிகா சர்மா போட்ட ஆட்டம் அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்தது. ஒரே பாட்டில் பேசப்பட்ட கெட்டிகா சர்மா, எங்கு சென்றாலும் கவர்ச்சிகரமான உடை அணிந்து அனைவரையுமே திரும்பி பார்க்க வைத்து வருகிறார்.

இதனிடையே ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் 'மீசைய முறுக்கு-2' படத்தில் நடித்திருப்பதின் மூலம், தமிழ் சினிமாவிலும் கெட்டிகா சர்மா காலடி எடுத்து வைக்கவுள்ளார். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'ஆரா பத்துக்கு பத்து...' என்ற பாடலுக்கு அவர் போட்ட நடன அசைவுகள் பெரியளவில் 'டிரெண்டிங்' ஆகி வருகிறது.

இளம்பெண்கள் ஏராளமானோர் அந்த 'ஸ்டெப்'களை போட்டு ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

இதனால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டிருக்கும் கெட்டிகா சர்மா, "தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமைக்குரியவர்கள். மொழி பாகுபாடு பார்க்காமல், திறமையான அத்தனை கலைஞர்களையும் கொண்டாடி தீர்ப்பதில் வல்லவர்கள். தமிழ் சினிமாவில் நடித்தது எனக்கு பெருமையான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com