'நியாயமான கோரிக்கை': தீபிகா படுகோனுக்கு மணிரத்னம் ஆதரவு


‘It is not an unreasonable thing to ask’: Mani Ratnam supports Deepika Padukones 8-hour shifts demand amid Vanga row
x
தினத்தந்தி 3 Jun 2025 5:59 PM IST (Updated: 18 Sept 2025 2:26 PM IST)
t-max-icont-min-icon

’ஸ்பிரிட்’ படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறியது குறித்து மணிரத்னம் பேசினார்.

சென்னை,

பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறியது கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேர ஷிப்ட் என்ற நிபந்தனையை அவர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது 'தக் லைப்' படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதன் புரொமோஷனின் 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் வெளியேறியது குறித்து மணிரத்னம் பேசினார்.

அப்போது " அது ஒரு நியாயமான கோரிக்கை என்று நான் நினைக்கிறேன். அதைக் கேட்கும் நிலையில் தீபிகா இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதை கேட்பது நியாயமற்ற விஷயம் இல்லை' என்றார்.

1 More update

Next Story