‘இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம்’ - நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கும் விவகாரம் தொடர்பாக, இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம் என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக்கொடுப்பதே விவேகம்’ - நடிகர் விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்
Published on

சென்னை,

ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி 800 என்ற திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதனால், அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கலையாளர் விஜய் சேதுபதிக்கு, சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு?. இன உரிமைக்காக கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com