''போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான்'' - இயக்குனர் மாரிசெல்வராஜ்


It is wrong for anyone to use drugs - Director Mariselvaraj
x

சென்னையில் நடைபெற்ற ''3 பிஎச்கே'' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரிசெல்வராஜ் கலந்து கொண்டார்.

சென்னை,

சட்டத்திற்கு புறம்பாக, போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என இயக்குனர் மாரிசெல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற ''3 பிஎச்கே'' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப்பொருட்களை யார் பயன்படுத்தினாலும் தவறுதான் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சிறிய பட்ஜெட் படங்கள் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, மக்களுக்கு கனெக்ட் ஆகும் படங்கள் கட்டாயம் ஓடும் என பதில் அளித்தார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், 'மிஸ் யூ' படத்தை தொடர்ந்து '3 பிஎச்கே' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தார்த்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

மறுபுறம் மாரிசெல்வராஜ், நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் 'பைசன்' படத்தை இயக்கியுள்ளார். அடுத்ததாக தனுஷின் ''டி56'' என்ற படத்தை இயக்க உள்ளார்.

1 More update

Next Story