என்னை பற்றி பரவும் செய்திகளை படிக்கும்போது சிரிப்பாக வருகிறது- நடிகை ஹன்சிகா

ஹன்சிகா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக செய்திகள் பரவி வருகின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. இவர் சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
இந்நிலையில் ஹன்சிகா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களுக்கு இதுவரை ஹன்சிகா மோத்வானி கருத்து எதுவும் கூறாமல் இருந்தார். இதையடுத்து ஹன்சிகாவின் தனிப்பட்ட செய்திகள் வைரலாக தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இதுகுறித்து ஹன்சிகா தற்போது திடீரென வெளியிட்டுள்ள வீடியோவில், என் வாழ்க்கையைப் பற்றிய மக்களின் கருத்துக்களை நான் படிக்கும் போது சிரிப்பாக வருகிறது என்பது போன்று ஒரு எமோஜியை ஹன்சிகா பகிர்ந்துள்ளார்.
ஹன்சிகா தற்போது விடுமுறையை கொண்டாடுவதற்காக பாலிக்கு சென்றுள்ளார். அங்கு கடற்கயோரத்தில் பிகினி உடையில் விடுமுறையை ஜாலியாக அனுபவிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் ஹன்சிகா.






