வருங்கால மனைவி தன்ஷிகாவின் ஆதரவுதான் என்னை மீட்டெடுத்தது - விஷால் உருக்கம்

‘மகுடம்’ படம் மூலம் ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் 45-வது இயக்குநராக விஷால் அறிமுகமாகிறார்.
வருங்கால மனைவி தன்ஷிகாவின் ஆதரவுதான் என்னை மீட்டெடுத்தது - விஷால் உருக்கம்
Published on

‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷால் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு நன்றி தெரிவித்தார்.

சென்னை,

‘செல்லமே’ படம் மூலம் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானவர் விஷால். அவர் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆகிறது.

‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் 45-வது அறிமுக இயக்குநர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகி உள்ளார். விஷால் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படத்தில் விஷால் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கவனம் பெற்ற டிரெய்லர்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99-வது படமாக ‘மகுடம்’ உருவாகியுள்ளது. இப்படத்தின் மூலம் விஷால் இயக்குநராகவும் தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். படம் வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி நேற்று வெளியான படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் டிரெய்லர் கவனம் பெற்று வருகிறது.

‘மகுடம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசினார்.

டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய விஷால் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா பற்றி நெகிழ்ச்சியாகப் பேசினார். அதில், “ஒவ்வொரு நடிகனுக்கும் கரியரில் ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். அந்த நேரத்தில் எல்லோரும் இத்துடன் கரியர் முடிந்துவிட்டது, இனி எழுந்து வரமுடியாது என்று சொல்வார்கள். அதுபோன்ற சூழலில் அனைவரும் என் மீது நம்பிக்கை இழந்தனர். கிட்டத்தட்ட 14 மாதங்கள் நடிக்க முடியாமல் நான் வீட்டில் இருந்தேன். அதற்கு காரணமான சில பேர் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.

இந்தத் தருணத்தில் நான் முக்கியமாக ஒருவருக்கு ரொம்பவும் கடமைப் பட்டிருக்கிறேன். என்னுடைய சுய வாழ்க்கை ரொம்ப பாதிக்கப்பட்ட நேரத்திலும், இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக என் கூட இருந்து, என் கஷ்டங்களில் என்னை ஊக்கப்படுத்தி, உங்கள் அனைவரின் முன்பும் இந்தளவு பாஸிட்டிவாக என்னை நிறுத்தியதற்கு காரணமாக இருந்த எனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு மிகவும் நன்றி. வேறு யாராவதாக இருந்தால் இந்நேரம் பிய்த்துக்கொண்டு ஓடியிருப்பார்கள்” என்று தெரிவித்தார்.

48 வயதாகும் நடிகர் விஷாலின் திருமணம் எப்போது?

சாய் தன்ஷிகா விஷால் இருவருக்கும் கடந்தாண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்கக் கட்டிடத்தைத் திறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக 48 வயதாகும் விஷால் தெரிவித்திருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com