அடுத்த வருடம் திரைக்கு வரும் ரஜினியின் 2 படங்கள்

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 44 வருடங்கள் ஆனதையொட்டி ரசிகர்கள் புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.
அடுத்த வருடம் திரைக்கு வரும் ரஜினியின் 2 படங்கள்
Published on

திரையுலக பிரமுகர் பலர் அவருக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகிறார்கள். 1975-ல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம் உள்ளிட்ட சில படங்களில் வில்லனாக வந்தார்.

கதாநாயகனாக அறிமுகமான பைரவி படம் 1978-ல் திரைக்கு வந்தது. ஆரம்ப காலத்தில் வருடத்துக்கு 23 படங்கள் வரை நடித்துள்ளார்.

சராசரியாக வருடம்தோறும் அவர் நடிப்பில் 12 படங்கள் வந்தன. ஆனால் 2010-ல் இருந்து இப்போதுவரை 8 படங்கள் மட்டுமே திரைக்கு வந்துள்ளன. கடந்த வருடம் 2 படங்கள் வெளிவந்தன. அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி தொடங்கி போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்குள் சில படங்களில் நடித்து முடித்து விடும் எண்ணத்தில் இருக்கிறார். கடந்த வருடம் காலா, 2.0 ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருடம் பேட்ட என்ற ஒரு படம் மட்டுமே ரிலீசானது.

தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படமும் அடுத்த வருடம் இறுதியில் வெளியாகிறது. எனவே அடுத்த ஆண்டு ரஜினி நடிப்பில் 2 படங்கள் திரைக்கு வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com