குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது - பார்த்திபன்

குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது - பார்த்திபன்

குந்தவை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது என பேசியிருப்பது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

சென்னை,

சமீபத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒன்றாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இந்த நிகழ்வு வெளியான நேரத்தில் விஜயின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றி விவாகரத்து தொடர்பான செய்திகள் பரவி வந்ததால், அது ரசிகர்கள் மத்தியில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, அவர் நடித்த நடிகைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேட்டபோது, பார்த்திபன் கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அவர் பேசும்போது, குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது. எல்லா கவிதைகளையும் ரசிக்க முடியும். சில கவிதைகளை வெளிப்படையாக வாசிக்க முடியாது என்று கூறினார்.

விஜயின் குடும்ப பிரச்சினை, த்ரிஷாவுடன் இணைந்த நிகழ்வு, பார்த்திபனின் கருத்து, ரசிகர்கள் வெளியிடும் பதிவுகள் - இவை அனைத்தும் சேர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்படும் விவாத பொருளாக மாறியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com