

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின் பாலி. பிரேமம் படத்தில் மலர் டீச்சருடன் டூயட் பாடிய நிவின் பாலி , மலையாளத்தில் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் அதிக கவனம் பெற்றார். மலையாள திரையுலகிற்கு நிகராக தமிழ்த் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள “பிரதிச்சாயா” படம் வரும் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் பெற்றுள்ள நிலையில், அண்மையில் விருது நிகழ்ச்சி ஒன்றில் நிவின் பாலி, விஜய் பற்றி பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் லியோ பட போஸ்டரையும் நிவின் பாலி வில்லனாக நடித்து இருக்கும் பென்ஸ் பட போஸ்டரும் காட்டப்பட்டது. அதில் லியோவை வால்டர் சந்தித்தால்(நடித்தால்) எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நிவின் பாலி, அடிபொலியாக இருக்கும்’ என்று நிவின் பாலி பதிலளித்துள்ளார்.