வரலட்சுமி இயக்கும் முதல் படம்...படப்பிடிப்பு நிறைவு

வரலட்சுமி இதை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்து முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார்.
It’s a WRAP for Saraswathi 's Journey
Published on

சென்னை,

தமிழ் , தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வரலட்சுமி சரத்குமார், இப்போது தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமாக போகிறார்.

தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து, தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு பேனரை சமீபத்தில் தொடங்கினர். இவர்களது முதல் படத்திற்கு ''சரஸ்வதி'' என்று பெயரிடப்பட்டுள்ளது. வரலட்சுமி இதை தயாரிப்பது மட்டுமில்லாமல் இயக்கி, முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

திரில்லர் படமாக உருவாகும் சரஸ்வதியில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை வரலட்சுமி புகைப்படங்கள் வெளியிட்டு அறிவித்துள்ளார். விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com