பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நிவின் பாலி

பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் பிரபல நடிகர் நிவின் பாலி உள்ளார்.
பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நிவின் பாலி
Published on

திருவனந்தபுரம்,

மலையாள திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நிவின் பாலி. பிரேமம் படம் மூலம் தமிழ் திரையுலகிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். நிவின் பாலிக்கும் ரின்னா என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் தாவீத் என்ற மகன் உள்ளளார்.

இந்த நிலையில், நேற்று மாலை அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் இது பெண் குழந்தை என்று எழுதப்பட்ட பலூனை பறக்கவிட்ட புகைப்படத்தை வெளியிட்டு நிவின் பாலி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com