முதல்வன் படத்தை நேரில் பார்ப்பது போல இருக்கிறது - நடிகர் சஞ்சீவ்

இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூர் போல மாறும் என நடிகர் சஞ்சீவ் கூறியுள்ளார்.
முதல்வன் படத்தை நேரில்  பார்ப்பது போல இருக்கிறது -  நடிகர் சஞ்சீவ்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் விஜயின் தோழரான நடிகர் சஞ்சீவ் பல திரைப்படங்களில் சேர்ந்து நடித்து இருக்கிறார். அதன்பின் சின்னத்திரையில் களமிறங்கி அதில் முன்னணி நடிகராக பயணித்து வருகிறார்.

இந்தநிலையில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சஞ்சீவ் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் விஜய் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மிக வேகமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறார்.. 'முதல்வன் 2' படம் பார்ப்பது போல இருக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூர் போல மாறும். உலகத்தர மருத்துவம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு எல்லாம் சாத்தியமாகும்

விமர்சனங்களை தாண்டி தனது விடாமுயற்சி மற்றும் வைராக்கியத்தால் விஜய் இன்று அசைக்க முடியாத ஆலமரமாக உயர்ந்துள்ளார்..அவர் எப்போதும் ஒரு Trend Setter (டிரெண்ட் செட்டர்)தான் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com