’கருப்பு’ பட நடிகையுடன் ஜோடி சேர்ந்த பகத் பாசில்

’96’, 'மெய்யழகன்' பட இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.
’கருப்பு’ பட நடிகையுடன் ஜோடி சேர்ந்த பகத் பாசில்
Published on

சென்னை,

’96’, 'மெய்யழகன்' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் சி. பிரேம்குமார் இயக்கும் புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் ஒரு திரில்லர் பாணியில் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதில் பகத் பாசில் மற்றும் ஸ்ஷிவாதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

ஐசரி கணேஷ் வழங்கும் இத்திரைப்படத்தை, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் மான்சூன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. வடிவேலுடன் நடித்த 'மாரீசன்' படத்திற்குப் பிறகு, பகத் பாசில் தமிழில் தனி ஒரு நாயகனாக நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் இதுவாகும். இவர்களுடன் சேத்தன், ஹரிஷ் உத்தமன் மற்றும் கருணாகரன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Also Read
"எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது"- நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
’கருப்பு’ பட நடிகையுடன் ஜோடி சேர்ந்த பகத் பாசில்

மகேஷ் நாராயணனின் 'பேட்ரியாட்' படத்தில் பகத் பாசிலும் ஸ்ஷிவாதாவும் இணைந்து நடித்திருந்தாலும், இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இது தவிர, ஸ்ஷிவாதா சமீபத்தில் சமுத்திரக்கனியுடன் 'தடயம்' என்ற ஓடிடி வெப் சீரிஸிலும், சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com