சந்தீப் கிஷான் நடிக்கும் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

சந்தீப் கிஷான் நடிக்கும் 'மைக்கேல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தீப் கிஷான் நடிக்கும் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!
Published on

சென்னை,

இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷான் மற்றும் திவ்யன்ஷா கவுசிக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மைக்கேல்'. கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் வாசுதேவ் மேனன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கரண் புரொடக்சன்ஸ் மற்றும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகும் தேதியை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் வருகிற 20-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடித்த 'புரியாத புதிர்' மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com