நேர்மையான பாராட்டுகள் கிடைப்பது அரிது - நடிகர் சமுத்திரக்கனி

சினிமாவுக்கு நிறைய வெற்றியாளர்கள் வரவேண்டும் என்று நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நவீன்குமார் பழனிவேல் இயக்கத்தில் சமுத்திரக்கனி, ஷிவதா நடித்த 'தடயம்' என்ற வெப் தொடர் சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த வெப் தொடரின் வெற்றியை, சென்னையில் படக்குழுவினர் கொண்டாடினார்கள்.

Also Read
ஷைன் டாம் சாக்கோவின் தம்பி அறிமுகமாகும் “நோவா” திரைப்படம்
கோப்புப்படம்

இதில் நடிகர் சமுத்திரக்கனி பங்கேற்று பேசும்போது, "ஒவ்வொரு மனதும் ஒரு நிறைவைத் தேடி ஏங்கிக்கொண்டே இருக்கும். 'தடயம்' அந்த நிறைவை மிகவும் ஆழமாக மனசுக்குள் கொண்டு வந்து பல விஷயங்களை சரிசெய்த மாதிரி உணர்வைத் தருகிறது. அதுதான் இந்த வெற்றியின் மகிழ்ச்சி.

Also Read
கென் கருணாஸின் “யூத்” படத்தின் டிரெய்லர் வெளியானது
கோப்புப்படம்

நான் சின்னத்திரையில் கிட்டத்தட்ட 3,000 எபிசோடுகள் இயக்கி இருக்கிறேன். ஆனால் அந்த பயணத்தில் இவ்வளவு நேர்மையாக பாராட்டுகளை கேட்கும் வாய்ப்பு அரிது. இன்று அந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இதுபோன்ற வெற்றிகள் நல்ல படைப்பாளிகளுக்கு உந்து சக்தி. இந்த வெற்றிக்காகத்தான் இத்தனை போராட்டங்கள் சினிமாவில் அரங்கேறுகின்றன. இன்னும் இந்த சினிமாவுக்கு நிறைய வெற்றியாளர்கள் வரவேண்டும்" என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com