லோகேஷ் கனகராஜ்- சுருதி ஹாசன் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியானது

நடிகர் கமல்ஹாசன் வரிகளில் சுருதி ஹாசன் இசையமைப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் வெளியானது.
லோகேஷ் கனகராஜ்- சுருதி ஹாசன் நடித்துள்ள 'இனிமேல்' பாடல் வெளியானது
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் ஆக்சன் படங்களை எடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் எடுக்கும் படங்களில் அவருக்கென ஒரு தனி ஸ்டைல் இருக்கும். கடைசியாக 2023 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கமல்ஹாசன் திரையுலக பயணத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் மிகவும் முக்கியமான படம். ரஜினி காந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தன் நண்பர்களுடன் மிக மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார். அர்ஜுன் தாஸ், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் சிவகார்த்திகேயன், சுருதி ஹாசன் போன்ற பலர் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அன்று அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இன்டிபென்டன்ட் ஆல்பம் பாடலுக்கான பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.

சுருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இந்த வெற்றி கூட்டணியில் அமையும் இப்பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். சமீபத்தில் பாடல் குறித்தான டீசர் வெளியானது.

இந்த டீசரில் லோகேஷ் - சுருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி தெறிக்க விடும் விதமாக இருப்பதாக இணையவாசிகள் தெரிவித்தனர். கமலையே மிஞ்சும் விதமாக அவரது மகள் சுருதியிடம் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் என அவரது நடிப்பு அவதாரத்தை பலர் புகழ்ந்தனர்.

'இனிமேல்' ஆல்பம் பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப்பில் பக்கத்தில் 'இனிமேல்' ஆல்பம் பாடல் வெளியானது. இதனை நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com