

ஐதராபாத,
பிரபல காமெடி நிகழ்ச்சியான 'ஜபர்தஸ்த்' மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகரை காதலிப்பதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
‘நாதோ நேனு’ பட புரமோஷனுக்காக நடிகர் சாயுடன் இணைந்து ஐஸ்வர்யா செய்த ஒரு ஸ்கிட் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த பலரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகளைப் பரப்பினர்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், "நான் ஒருவரை காதலித்தது உண்மைதான், ஆனால் அது இப்போது இல்லை. காதல் மிகவும் மதிப்புமிக்கது. அதற்குத் தகுதி இல்லாத ஒருவர் உங்கள் வாழ்க்கையில் வரும்போது, அந்த காதல் நிலைப்பதில்லை. தற்போது நான் சிங்கிளாக மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்றார்.