"கஜினி படத்திலிருந்தே சூர்யா மீது கிரஷ்" - மமிதா பைஜு

'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
மமிதா பைஜு
Published on

சென்னை,

கஜினி படத்திலிருந்தே சூர்யா மீது கிரஷ் உள்ளதாக 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் மமிதா பைஜு ஓப்பனாக பேசினார்.

விஸ்வநாத் & சன்ஸ்

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, மமிதா பைஜு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சுனில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

'சூர்யா சார் எனக்கு இன்ஸ்பிரேஷன்'

விழாவில் பேசிய மமிதா பைஜு, "சூர்யா சாரை பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. ஆனால் இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கஜினி படத்தில் இருந்தே சூர்யா சார் மீது எனக்கு கிரஷ் இருக்கிறது. அவருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது’ என்றார்.

ஆகஸ்ட் 14-ல் ரிலீஸ்

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், மமிதா பைஜு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com