’ராம் சரணின் அந்த படத்தை பல முறை பார்த்தேன்’ - நடிகை அனஸ்வரா


I’ve watched Magadheera countless times- AnaswaraRajan
x

அனஸ்வரா தற்போது சாம்பியன் படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தற்போது ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் ’சாம்பியன்’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.

இதில் , கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் சந்திரகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கும் இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற 25-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. இதனை ராம் சரண் வெளியிடுகிறார்.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் அனஸ்வரா பேசுகையில், 'சாம்பியன்' டிரெய்லரை வெளியிடும் ராம் சரண் சாருக்கு நன்றி.நான் அவருடைய மாவீரன் திரைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். மனோரமா தொலைக்காட்சியில் அதை வாரா வாராம் போடுவார்கள்’ என்றார்

1 More update

Next Story