

சென்னை,
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (வயது 94). இவர் தமிழில் ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதாலா உள்பட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.
இதனிடையே, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், சிங்கீதம் சீனிவாசராவ் உடலுக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள சிங்கீதம் சீனிவாசராவ் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சிங்கீதம் காரு தன் சித்தப்படி இளமையில், இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்றவேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள் சீடர்களுள் நானும் உளேன்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.