8 ஹீரோயின்கள், 5 வில்லன்கள்?...எதிர்பார்ப்பை அதிகரித்த சன்னி தியோலின் 'ஜாத்'


Jaat: 8 actresses join Sunny Deol to fight against villains in Gopichand Malinenis film
x

இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.

மும்பை,

பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' படத்தை இயக்கி வருகிறார். கோபிசந்த் பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.

இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளநிலையில், முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் 5 வில்லன்கள் உள்ளதாகவும், 8 ஹீரோயின்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, சயாமி கெர், ரெஜினா கசாண்ட்ரா உடன் பாந்தவி ஸ்ரீதர், மவுமிதா பால், விஷிகா கோட்டா, பிரனீதா பட்நாயக், தவுலத் சுல்தானா மற்றும் ஆயிஷா கான் ஆகியோர் நடிப்பதாக தெரிகிறது. இது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

1 More update

Next Story